MBBS BDS Merit list தமிழ்நாடு மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல்
Tamilnadu NEET Merit List 2023
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. தமிழ் நாட்டில் மொத்தம் 42,028 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 7.5% ஒதுக்கீட்டில் 2,993 பேரும் அரசு ஒதுக்கீட்டில் 25,856 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் 13,179 பேர். இதுவே கடந்த வருடம் 36,193 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் அகில இந்திய அளவில் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் 720க்கு 720 மதிபெண்கள் பெற்று முதல் இடத்தினை பெற்றார். அகில இந்திய அளவில் முதல் பத்து மாணவர்களில் 5 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த சுமார் 606 பேர் 7.5 % ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்புக்காக தேர்வு பெறுகிறார்கள்.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டில் கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தினை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக பச்சியப்பன் 565 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் மற்றும் எம்பிசி பிரிவில் முதல் இடமும் பெற்றுள்ளார்.
அரசு ஒதுக்கீடு தரவரிசையில் சூரிய சித்தார்த் மற்றும் வருண் 715 மதிபெண்கள் பெற்று முதல் இடத்திணை பெற்றுள்ளார்கள். மற்றும் சஞ்சனா நாகமலை சத்தியன் 715 மதிபெண்கள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளார்.
PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2023 – 2024 SESSION (GOVERNMENT QUOTA)
வருண் 715 மதிபெண்கள் பெற்று நிர்வாக ஒதிக்கீட்டிலும் உள்ளார். இவருக்கு அடுத்து சாமுவேல் அர்சித் 715 மதிபெண்கள் பெற்று உள்ளார்
PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2023 – 2024 SESSION (MANAGEMENT QUOTA)